உடன் வெளியேறுங்கள்! இஸ்ரேலின் முக்கிய ஊடகத்தை தாக்க தயாராகியுள்ள ஈரான்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் "பிரச்சார தொலைகாட்சி" என்று குற்றம் சாட்டப்படும் இஸ்ரேலின் “சனல் 14” செய்தி நிலையத்தின் அலுவலகங்களைத் தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை ஈரானின் அரசு நடத்தும் இஸ்லாமிய குடியரசு ஈரான் ஒளிபரப்பு (IRIB) இன்று தெரிவித்துள்ளது.
ஈரான் தொலைக்காட்சி அலுவலகங்களை வரும் நாட்களில் குறிவைத்து தாக்குதல் நடத்தும் என்றும், அனைத்து தொழிலாளர்களையும் அங்கிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தப்படுவதாகவும் ஐஆர்ஐபி தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம்
திங்களன்று, இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் அரசு செய்தி நிறுவனத்தின் வளாகத்தைத் தாக்கியது ,

அதை "ஈரானிய ஆயுதப் படைகளால் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தகவல் தொடர்பு மையம்" என்று இஸ்ரோல் குற்றம் சுமத்தியது.
இதன்போது தனது ஊழியர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு பழிவாங்கும் நகர்வை ஈரான் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri