ஈரான் எச்சரித்த சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ஹைஃபா எரிபொருள் கிடங்கு
புதிய இணைப்பு
ஹைஃபா விரிகுடாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதன்விளைவாக, குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் அனைத்து வசதிகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
டெல் அவிவ் பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில், வசதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் விளைவாக, மின் உற்பத்தி நிலையம் கணிசமாக சேதமடைந்தது, எனவே சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் துணை நிறுவனங்களின் அனைத்து வசதிகளும் மூடப்பட்டன.
மேலும், குறித்த பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை மீண்டும் தொடங்க இஸ்ரேலிய மின்சார சபையுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Haifa plant is reportedly hit by Iranian missile.
— Dr Shama Junejo (@ShamaJunejo) June 16, 2025
Haifa Oil Refinery also shuts down. #Israel #Iran #Tehran #TruePromise3
pic.twitter.com/2t7GrsoJ4S
முதலாம் இணைப்பு
இஸ்ரேலிய செய்தி தளங்களுக்கு ஈரான் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் இன்று ஈரானின் அரச ஒளிபரப்பு நிறுவனத்தின் கட்டிடத்தின் மீது ஏவுகணை தாக்குதலை மெற்கொண்டனர்.
வெளியேற்ற எச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து , இஸ்ரேலிய செய்தி தளங்களுக்கு ஈரான் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, இஸ்ரேலின் N12 மற்றும் N14 செய்தி நிறுவனங்களுக்கு ஈரான் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியக் குடியரசின் ஒளிபரப்பு சேவைக்கு எதிராக சியோனிச எதிரியின் விரோதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
