குறிவைக்கப்படும் அலி கமேனி.. நெதன்யாகு வெளியிட்ட பகிரங்க தகவல்
ஈரானிய அயதுல்லா அலி கமேனியை கொல்வது எமது பிரதான நோக்கம் இல்லை என்றாலும் அது சில வேளை நடக்கலாம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய - ஈரானிய போர்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் உயர்மட்ட அதிகாரியான அலி கமேனி மீது இஸ்ரேல் குறிவைப்பதாக தகவல்கள் வெளியாகின.
அணுசக்தி விஞ்ஞானிகள்
இந்நிலையில், இன்று காலை அவர் பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில்,"ஈரானிய உயர்மட்ட தலைவர் அலி கமேனியை குறிவைப்பதை நிராகரிக்க மாட்டோம்.
நாங்கள் அவர்களின் உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகளை குறிவைத்துள்ளோம். இது மோதலை அதிகரிக்கப் போவதில்லை, மோதலை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam