ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளையும் கோரவில்லை: பாகிஸ்தான் அறிவிப்பு
பாகிஸ்தானிடம் ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளும் கோரவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஷாஃபகத் அலி கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தெரிவிக்கையில், “ஈரான் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாடு மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் உள்ளது. நாங்கள் ஈரான் அரசுக்கு எங்களது முழு தார்மீக ஆதரவையும் வழங்குகிறோம்.
மேலும், ஈரான் மீதான தாக்குதல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.இதனைத் தொடர்ந்து, ஈரானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது குறித்து ஈரான் அரசிடமிருந்து எந்தவொரு வேண்டுகோளும் முன்வைக்கப்படவில்லை.
வெளியேற்றும் நடவடிக்கை
ஈரானுக்கு அவர்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. விதிமுறைகளுக்கு எதிரானவை என்று கூறி, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை 21 இஸ்லாமிய நாடுகள் கூட்டாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் தெஹ்ரானில் சிக்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதில், தற்போது வரை 3,000 பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகம் திரும்பியுள்ளனர்.
அத்துடன், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அனைத்தும் மத்திய கிழக்குப் பகுதிகளில் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை உண்டாகக் கூடும் என்பதை வலியுறுத்தி பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், ஈரான், துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 12 மணி நேரம் முன்

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
