அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் போர் நிறைவுக்கு வரும் : ட்ரம்ப் நம்பிக்கை
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஈரானிய தரப்பு பாதிக்க முற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் ஈரானிய தரப்பு தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செங்கடலின் முக்கிய கடல் வழி
இருப்பினும், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான 'பிக்எக்ஸ் மவுண்டன்' பகுதியை இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், செங்கடலின் முக்கிய கடல் வழியான பாப் அல்-மந்தேப் நீரிணைப் பகுதியில் ஹூதி அமைப்பினரின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.
மறுபுறம், சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.