ஈரான் மக்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மக்களுடன் அல்ல, மாறாக ஈரானின் தலைவர்களுடனானது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது மக்களுக்கான நேரம் எனவே உங்களது கருத்துக்களை கூறுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானின் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை முறியடிப்பதே இஸ்ரேலின் நோக்கம் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அடக்குமுறை ஆட்சி
நாங்கள் எங்கள் இலக்கை அடையும் அதே வேளையில் ஈரானிய மக்களின் சுதந்திரத்தை அடைவதற்கான பாதையையும் தாம் தெளிவுபடுத்துவோம் எனவும் நெதன்யாகு கூறியுள்ளார்.
மேலும், அடக்குமுறை ஆட்சியிலிருந்து விடுவிக்க ஈரானிய மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



