ஈரானில் மொசாட் அமைப்புடன் தொடர்புடைய 35 பேர் கைது
இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' உடன் தொடர்புடையவர்கள் உட்பட 35 பேரை ஈரான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கைது செய்யப்பட்டவர்களில் மொசாட் அமைப்பின் ஆதரவாளர்கள், ஆயுதக் கடத்தல்காரர்கள் மற்றும் பிரிவினைவாதக் குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
நாட்டின் ஆறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஈரானின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஈரான் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam