குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
18 ஆவது ஐ.பி.எல்.தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் இன்று(25) நடைபெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குறித்த போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள்களாக ஆயுஷ் மாத்ரே - டெவான் கொன்வே களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய டெவான் கொன்வே அரைசதம் அடித்து 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டெவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ்
இதனையடுத்து 231 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.
எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து குஜராத் டைட்டன்ஸ் தடுமாறியது.
இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ஓட்டங்களுக்கு குஜராத் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்மூலம் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இது சென்னை அணியின் 4ஆவது வெற்றியாகும்.