இளம்செழியன் விவகாரம் சத்தியலிங்கத்துக்கு அழைப்பானை (Photos)
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணியின் இணை பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியன் கட்சியில் இருந்து
நீக்கப்பட்டமை தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து
கொள்ளப்பட்ட போது தங்களது ஆட்சேபனையை மன்றுக்கு தெரிவிக்க சந்தர்ப்பத்தை வழங்கி
இடைக்கால தடை எதிர்வரும் 17.06.2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையானது இன்று யாழ். மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருலாளரும், மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து, இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம் நீக்கியமை தவறு என யாழ். மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஊடாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நிர்வாக செயலாளர் சூ.சேவியர் குலநாயகம் மட்டும் இன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர். பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை.
பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிமன்ற கட்டளையை இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்
சத்தியலிங்கம், இன்று வரை பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆகவே அவருக்கு
பகிரங்க அழைப்பானை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.



