ஜேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு அழைப்பு
மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை ஜேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைக்கு வலுசேர்க்கவும் ஜேர்மன் வெளி விவகார அமைச்சுக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலொன்று நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக வரவிருக்கும் தீர்மானத்தின் வரைபில் முக்கிய பங்காற்ற உள்ள ஜேர்மன் அரசாங்கம், இன அழிப்பிற்கு உள்ளான மக்களுக்குப் பரிகார நீதி கிடைக்க வலியுறுத்த வேண்டுமென்பதைக் கோரி பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திரநாள் - ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று தலைநகரை நோக்கி அணிதிரள்வோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீதியின் விழிகள் திறக்கட்டும்
தமிழரின் விடியல் பிறக்கட்டும்!!!