யாழ். பல்கலைக்கழக மாணவர்களை ஒளிப்படமெடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் (video)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் உட்பட்ட பலதரப்பினரை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (30.01.2023) திருக்கோவிலில் உள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடலுக்காக சென்றுள்ளனர்.
இதன்போது மாணவர்கள் பயணித்த வாகனத்தையும், மாணவர்களையும், காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படமெடுத்துள்ளனர்.
எனினும் அவர்களை புகைப்படம் எடுக்கமுடியாது என மாணவர்கள் விவாதித்த நிலையிலும் தொடர்ச்சியாக ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என மாணவர்கள், சிவில் சமூகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்து.
மேலதிக தகவல்: கஜிந்தன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
