இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள நபர்களுக்கு சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
போலியான சமூக ஊடக கணக்குகள் ஊடாக வெறுப்புணர்வை பரப்பும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற அமர்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு சமூகங்களை இலக்கு வைத்து வெறுப்பூட்டும் பேச்சுக்கள்
இதற்கமைய, பல்வேறு சமூகங்களை இலக்கு வைத்து வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பரப்பப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்புவதற்காக போலி கணக்குகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள நபர்களை விசாரணைகளில் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றுக்கான எந்த ஆதாரமும் இதுவரை விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக உரிய தகவல்களை ஏற்கனவே நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாகவும், அதிகாரிகள் பல சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்