முன்னாள் முக்கியஸ்தர்கள் முப்பது பேருக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்
முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பதவிகள் வகித்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட முப்பது பேருக்கு எதிரான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிகாரமிக்க அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களின் சொத்துக்கள் மீதான விசாரணைகளும் தற்போதைக்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
பல சக்திவாய்ந்த பிரமுகர்களின் சொத்துக்கள்
அதனடிப்படையில் ஆரம்ப கட்டமாக அரசியல் மற்றும் அரசாங்கத் துறைகளில் உயர் பதவிகளை வகித்த சுமார் முப்பது முக்கிய பிரமுகர்களின் சொத்துக்கள் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020 மற்றும் 2024இற்கு இடையில் நாட்டின் அரசியல் அதிகாரம் மற்றும் நிர்வாகத்தில் செல்வாக்கு மிக்க பதவிகளை வகித்த ஒரு குழுவினரே இந்த விசேட விசாரணைகளில் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய விசாரணை செயல்முறையின் கீழ், குற்றப் புலனாய்வுத் துறையால் தற்போது பராமரிக்கப்படும் சில சொத்து விசாரணை கோப்புகளை, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு மேலதிகமாக நாட்டின் அரசியல் களத்தில் உள்ள பல சக்திவாய்ந்த பிரமுகர்களின் சொத்துக்கள் குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam