நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், நிர்வாகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் குறித்து 6 மாதங்களுக்குள் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் கிடைத்த புலனாய்வு தகவல்கள் தொடர்பில், நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக பொறுப்புக்கூற வேண்டிய அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவு, பொலிஸ் தலைமையகத்திற்கு
கிடைத்துள்ளதாகவும், அது பொலிஸின் சட்டத்துறைக்கும்
அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.