அம்பாறையில் பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு
அம்பாறையில் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் நேற்றையதினம்(7) உயிரிழந்திருந்தார்.
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவினர்கள் சிலர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து உயிரிழக்கவில்லை எனவும் உயிரிழந்தவரின் உடம்பில் காயங்கள் காணப்படுவதாகவும் எனவே நீதி வேண்டும் என கோஷம் எழுப்பி இருந்தனர்.

அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

