வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதி தொடர்பில் விசாரணைகள்
வெலிக்கடை சிறையிலிருந்து கைதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பியது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 45 வயது கைதி ஒருவர், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் சிறைச்சாலை வளாகத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
தப்பிச்சென்றுள்ள கைதிகள்
கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற இந்த தப்பித்தல் சம்பவம் குறித்து, சிறை அதிகாரிகளும் பொரளை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

சிறைச்சாலை ஓய்வு விடுதியை சுத்தம் செய்வதற்காக மூன்று கைதிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர்களை மேற்பார்வையிட்டு வந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோத்தர் மதிய உணவுக்காக தனது அலுவல் இல்லத்திற்குச் சென்றபோது கைதி தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் தனது சிறை அங்கியை கழற்றிவிட்டு, சாரமொன்றை அணிந்துகொண்டு, சுமார் 1,50,000 ரூபாய் மதிப்புள்ள சிறைச்சாலை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, பிரதான வாயிலிலிருந்து லெஸ்லி ரணகல மாவத்தை நோக்கி தப்பிச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
தப்பிச்சென்றுள்ள கைதியை கைது செய்வதற்காக சிறை அதிகாரிகளும் பொரளை பொலிஸாரும் இணைந்து விசேட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri