காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் யாழில் விசாரணை
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை யாழ். பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாழ். பிரதேச செயலகத்தில் மேற்கொண்டுவருகிறது இன்று காலை முதல் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், சங்கானை, காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலணை பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணை
குறித்த விசாரணைகளானது நேற்று முன்தினம் உடுவில் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில், நேற்றையதினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் விசாரணைகள் நடைபெறுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan