அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான தொகை!
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபா வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலேயே நாட்டைப் பொறுப்பேற்று நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அரச சேவையை வினைத்திறனாக்குவதற்கு டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக பல மில்லியன் ரூபா நிதி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது அவர்களின் விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்றே பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை தடுக்க வேண்டிய தேவையோ அல்லது நோக்கமோ அரசாங்கத்துக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam