இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை பணம்: இலங்கை மத்திய வங்கி தகவல்
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருமானம் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2025 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வருமானம் 186.1 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருமானம் 2,533.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன்போது இது 4.9% அதிகரிப்பு என்று மத்திய வங்கி மேலும் கூறுகின்றது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
இதற்கிடையில், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் நவம்பர் 12, 2025 வரை நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,972,957 ஆகும்.
இவர்களில், இந்தியாவிலிருந்து 443,622 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 180,592 பேரும், ரஷ்யாவிலிருந்து 144,308 பேரும், ஜெர்மனியிலிருந்து 123,053 பேரும், சீனாவிலிருந்து 115,400 பேரும் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1 முதல் 12 வரை நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82,270 ஆகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam