தலதா மாளிகை மீதான தாக்குதலுக்கு நீதி கோரும் சஜித் தரப்பு
கடந்த 1989ம் ஆண்டில் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகை மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட ஜே.பி.பி உறுப்பினர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1989ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜே.வி.பி உறுப்பினர்கள் தலதா மாளிகை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாநாயக்க தேரர் பொறுப்புடன் உறுதிப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஓருவர் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டதுடன் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது பொலிஸாரின் ஆயுதங்கள் அபகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போதிலும் அதற்கு முன்னரே புனித பூமியான தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கமாக ஜே.வி.பியை அடையாளப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகையின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தவில்லை என்ற காரணத்தினால் ஜே.பி.பி தரப்பினர் குற்றமற்றவர்கள் என அடையாளப்படுத்தி விட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை விதை்த போது தெற்கில் ஜே.வி.பி அந்த விடயத்தை மேற்கொண்டது என தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டுக்கள் குறித்த வழக்குகள் தொடர கால வரையறை கிடையாது என்ற காரணத்தினால் மல்வத்து மாநாயக்க தேரரின் கூற்றின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்திய தரப்பினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென அஜித் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam