டெல்லியில் வெடித்த போராட்டம்! கவனத்தை ஈர்த்துள்ள 29 வயது பெண்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் கவனம் பெற்றுள்ளன.
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கையின்போது (SIR), 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவரான நேஹா போரா, பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சிப்பதாகக் கூறப்படும் அவரது காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன.
இதேவேளை, காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கே மற்றும் அக்கட்சியின் ஏனைய தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றபோது விமான நிலையத்தில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri