கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை அறிமுகம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிருந்து வருகை தரும் பயணிகள் 20 வினாடிகளுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு காகிதம் அல்லது ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமின்றி புதிய இணைய முறையொன்று இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் போது airport.lk இணையத்தளத்தின் ஊடாக இந்த அமைப்பை அணுக முடியும் அல்லது விமான நிலைய வருகை வளாகத்தில் அமைந்துள்ள QR ஊடாக குறியீட்டு பலகைகளுக்குச் சென்று உங்கள் தகவலைச் சமர்ப்பிக்கலாம்.
அதன்படி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் 72 மணித்தியாலங்களுக்கு முன் பெறப்பட்ட PCR பரி சோதனை அறிக்கை மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தடுப்பூசி செலுத்திய அட்டை ஆகியவற்றை இந்த அமைப்பின் மூலம் இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பயணிகள் வரிசையில் நிற்பது, ஆவணங்களை நிரப்புவது அல்லது பிற சாதனங்களைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்புவது ஆகியவற்றின் தேவை இனி இருக்காது என்பது சிறப்பம்சமாகும்.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam