தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் தலையீடு
இலங்கையில் முன்னெடுக்கப்படும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளில் சில பிரதேசங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்கு செல்லும் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மொறட்டுவை நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள தடுப்பூசி போடும் மையத்தில் நேற்று கடும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நகர சபை முதல்வரின் உத்தியோகபூர்வ முத்திரை அச்சிடப்பட்ட அட்டைகளை வைத்துள்ள நபர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்படுவது இதற்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.
அதிகாலையில் இருந்து வரிசையில் நின்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam