பண மோசடி செய்த கணவன், மனைவி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
துபாய் நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள சுற்றுலா விசா அனுமதியில் அங்கு அனுப்பி வைப்பதாக கூறி, பண மோசடி செய்த கணவன், மனைவியை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு, இந்த சந்தேக நபர்களான கணவன், மனைவியை கைது செய்து, குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் நேர்நிலைப்படுத்தியது.
ஒற்றர் ஒருவர் மூலமாக இவர்களை குருணாகலில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அலுவலகத்திற்கு வரவழைத்துள்ள அதிகாரிகள், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், கைது செய்துள்ளனர்.
துபாய் நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி சந்தேக நபர்கள் ஒருவரிடம் தலா 9 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
