யாழில் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் முன்னெடுப்பு(Photos)
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று(21.06.2023) யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் யோகா பயிற்சிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது .
‘வசுதைவ குடும்பத்திற்கான யோகா’ என்ற கருப்பொருளின் கீழ் ஏற்ப்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் 500ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
யோகா தின நிகழ்வு
குறித்த, யோகா தின நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து ஸ்ரீசத்குணராஜா, SLSF கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே. ஹெட்டியாராச்சி, யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ஏ.சிவபாலசுந்தரன், மாநகர ஆணையாளர் தனபாலசிங்கம் ஜெயசீலன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் எஸ்.லலீசன், சி.வி.கே. சிவஞானம், வடமாகாணசபை தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
