‘விழித்தெழு பெண்ணே’ : உலகளாவிய பெண் ஆளுமைகளின் விருது விழா -2023
பெண் தன் ஆளுமைகளைக் கூர்மைப்படுத்துவதையும் வெளிப்படுத்துவதையும் அதனை நிலைக்கச் செய்வதனையும் அது சம்பந்தமாக உலகம் பேச வைப்பதும் முதலாவது பெண்சார்ந்த செயற்பாடாகக் கருத்தில் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட பெண் ஆளுமைகளைக் கௌரவிக்கப்படவேண்டும் என்ற நோக்குடன் வீறு நடைபோட்டு எழுந்துள்ளது கனடா ‘விழித்தெழு பெண்ணே’ சர்வதேச மகளிர் அமைப்பு.
அந்தவகையில், கனடா ‘விழித்தெழு பெண்ணே’ சர்வதேச மகளிர் அமைப்பு பெருமையுடன் வழங்கும் உலகளாவிய பெண் ஆளுமைகளின் விருது விழா -2023 நாளை 21ஆம் திகதி மாலை 5.30 மணிக்குக் கொழும்பு – இல- 48 ஜனாதிபதி மாவத்தை, THE BALMORAL, THE KINGSBURY COLOMBO இல் நடைபெறவுள்ளது.
சாதனை பெண்கள்
இவ்விழாவில், இலங்கையில் பல துறைகளில் சாதனைப்படைத்த 50ற்கும் மேற்பட்ட வெற்றி மங்கையர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த விருது வழங்கல் விழாவிற்கு இணைய ஊடக அனுசரணையினை லங்காசிறி, IBC தமிழ் மற்றும் Cineulagam என்பன வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
