சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்த கனடா
கனடாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி வழங்கப்படும் என கனடா அரசு தீர்மானம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்த தீர்மானம் இந்த செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
கனடா அரசு முன்னெடுக்கவுள்ள இந்த தீர்மானம் கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே என புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியுள்ளார்.
பொருளாதார ரீதியான பாதிப்பு
எனினும், குறித்த தீர்மானம் சர்வதேச மாணவர்களை பொருளாதார ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாக்குவதாக கனடாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வகையில், இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றுள்ள நீவா (Neeva Phatarphekar) என்னும் மாணவி, இதுவரை வராம் ஒன்றிற்கு 40 மணி நேரம் வேலை செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது செலவுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வரும் நிலையில், கனடா அரசு முன்னெடுக்கவுள்ள இந்த புதிய கட்டுப்பாடு தன்னை போன்ற மாணவ மாணவியரை மேலும் கடுமையாக பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
