சர்வதேச விளையாட்டுக்களில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு கௌரவிப்பு
2024ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் பங்குபற்றிய ரோல் போல் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் (Champion) பட்டத்தை பெற்ற இலங்கை அணியை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, மன்னார் (Mannar) புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று (19.05.2024) நடைபெற்றுள்ளது.
குறித்த விளையாட்டு போட்டிகள் கடந்த 11 மற்றும்12ஆம் திகதிகளில் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றன.
ரோல் போல் விளையாட்டு
இதன்போது, ரோல் போல் விளையாட்டில் இலங்கை அணி சார்பாக பங்குகொண்ட மன்னார் மாவட்ட வீரர்களான மாணவர் மாணவிகளுக்கான பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வுமே இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, ரோல் போல் விளையாட்டானது, இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் முதலாக மன்னார் மாவட்டத்திலேயே இந்த விளையாட்டு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்ட விளையாட்டு வீரர்கள் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச ரோல் போல் விளையாட்டு எதிர்வரும் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை ரோல் போல் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
