இலங்கைப் பெண்கள் இருவருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்து, ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர்.
11 பேர் அடங்கிய பட்டியலில் இடம்பிடித்துள்ள இருவரும் தமிழ் பேசும் பெண்கள் என்பது விசேட அம்சமாகும்.
தொழில்முனைவோர், ஊடக நிர்வாகிகள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட மிக முக்கிய பதவிகளை வகிப்பதில் சிறந்த ஆளுமைகளை பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
உலக வங்கி தகவல்
விழுது என்ற சிவில் சமூக அமைப்பிற்கு தலைமைத்தாங்கும் மைத்ரேயி ராஜசிங்கம் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி வில்சன் ஆகியோரே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், தெற்காசியாவில், நான்கு பெண்களில் ஒருவர் மாத்திரமே பணிபுரிவதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல மில்லியன் பெண்கள் வீட்டிற்கு வெளியே தொழில் அல்லது வேலையில் ஈடுபட்டு தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் வருமானம் ஈட்டி, தங்கள் சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்குப் பங்களிக்கும் வாய்ப்பைப் பெறவில்லை என்பதே இதன் அர்த்தமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரபட்சமான சட்டங்கள் மற்றும் கொள்கைகள், கல்வி மற்றும் பயிற்சிக்கான அணுகல் இல்லாமை மற்றும் ஊதியம் இல்லாத வேலை மற்றும் குடும்ப பராமரிப்புப் பொறுப்புகளின் நேரத்தைச் செலவழிக்கும் சுமை உள்ளிட்ட பல தடைகளை தெற்காசியப் பெண்கள் தொழிலில் ஈடுபடுவதில் எதிர்நோக்குகின்றனர்.
எனினும், அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து, வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கான பாதையைத் உருவாக்குவதற்கு, அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் பங்களிக்க முடியுமென உலக வங்கி தெரிவிக்கின்றது.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 21 மணி நேரம் முன்

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
