தேர்தல் பிரசார மேடைகளில் சர்வதேச அமைப்புக்கள்
வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வருகை தந்துள்ளனர்.
குருமன்காடு பகுதியில் இன்று (08.09.2024) இடம் பெற்ற தேர்தல் பிரசார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய செயல்பாடுகள் தொடர்பிலும் அவர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
தேர்தல் பிரசாரக் கூட்டம்
அத்துடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டதுடன் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அரசியல்வாதிகளாலும், ஜனாதிபதி வேட்பாளராலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் குறிப்புக்களை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
