இலங்கை அரச பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச கல்வி வாய்ப்புகள்
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் பல சர்வதேச கல்விப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் முன்வைத்த இந்தப் பிரேரணையின் நோக்கம், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் சர்வதேச தரவரிசையை மேம்படுத்துவதுடன், கல்வித்துறையின் சர்வதேசமயமாக்கலையும் ஊக்குவிப்பதாகும்.
சர்வதேச கல்வி வாய்ப்புகள்
இதன்படி, கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவின் மணிப்பால் அகடமிக்கும் இடையிலான ஒத்துழைப்பு, புத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திற்கும் தாய்லாந்தின் மஹாமகுட் புத்த பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், மொரட்டுவைப் பல்கலைக்கழகம் சீனா மற்றும் ஸ்பெயின் நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகம் இணைந்து முதுகலை ஆய்வுப் பயிற்சிகளை முன்னெடுப்பதற்கான Umbrella Cotutelle ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவுள்ளன.
இந்தக் கூட்டாண்மைகள் மூலம் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் சர்வதேச கல்வி வாய்ப்புகள், ஆய்வுப் பணிகள் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.