இலங்கையை பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின் கீழ் இலங்கை தனது வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வை வெற்றிகரமாக முடித்துள்ளமையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
குறித்த விடயத்தை இன்று(12.01.2024) ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆளுகை கண்டறியும் அறிக்கை
மேலும், நாட்டின் நேர்மறையான தொடக்கத்தையும், உள்நாட்டு மக்கள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திய சவாலான சீர்திருத்தங்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இந்தநிலையில் தமது நிர்வாக சபை சந்திப்பின் போது, ஆசியாவின் முன்னோடி முயற்சியாக கருதப்படும் ஆளுகை கண்டறியும் அறிக்கையை வெளியிடுவதில் இலங்கையின் தைரியத்திற்காக சர்வதேச நாணய நிதிய இயக்குனர்கள், ஜனாதிபதி ரணிலை பாராட்டியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |