12 ஆண்டுகளாகியும் சர்வதேச நீதி கிடைக்கவில்லை - தவராசா கலையரசன்
உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்பட்ட, உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண் இன்றோடு 12 ஆண்டுகள் கடந்து செல்கிறது என நாடாளுமன்றத்தில் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு மாதம் 18 எம் இனத்தின் குரல்களும் இலங்கை அரசின் ஆயுத அடக்கு முறைக்குள் ஒடுக்கப்பட்டது
வடக்கிலும் ,கிழக்கிலும் பல தடையுத்தரவு பெறப்பட்டு எம் இனத்தின் உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாதவாறு அரசின் இராணுவ அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
யுத்தத்தில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கோர முடியாத தேசமாக கௌதம புத்தரின் பெயரில் நடக்கும் ஆட்சியாளர்களால் தடைகள் இது புத்த பெருமானை கூட ஏளனம் செய்யும் செயல்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூபி இராணுவ முற்றுகையுடன் தகர்க்கப்பட்டு நினைவு கல் இரவோடு இரவாக அகற்றப்பட்ட செயல் சர்வாதிகாரத்தினை விட மேலானது .
மூன்று தசாப்தங்களாக ஈழ தேசத்தில் இடம்பெற்ற யுத்தம் பல்லாயிரம் உயிர்களை காவு கொடுத்த உறவுகள் தங்கள் உள்ள குமுறல்களை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சென்று கண்ணீர் விட்டு கனத்த இயத்தை ஆசுவாசப்படுத்த அரசின் கொடுங்கோல் ஒருபோதும் இடங்கொடுக்க போகவில்லை.
தமிழர்களை நிம்மதியாக வாழ விட போவதில்லை என்ற சமிக்ஞையாக இதனை பார்க்க முடிகின்றது. ஒருபோதும் சிங்கள தேசம் நிம்மதியாக வாழ விடாது என்பதையே காலா காலமாக அடக்குமுறைகள் மூலம் சர்வதேசத்திற்கு உணர்த்துகின்றது.
இதற்கான சர்வதேச நீதி ஆண்டுகள் 12 ஆகியும் இல்லை என்பதே மிக வேதனையான விடயம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 12 வருடங்கள் கடந்தும் நீதியற்ற சமூகமாக நிற்கின்றோம் . இந்த கோரமான இனப்படுகொலையில் 21 ம் நூற்றாண்டில் இவ்வாறு ஒரு அழிவினை சந்தித்ததில்லை என்பதை அங்கு குறிப்பிட்டுள்ளார்.



மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam