எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த சர்வதேச நிபுணர்! (Photos)
முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற அபிவிருத்தி மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான சர்வதேச சிரேஷ்ட கொள்கை வகுப்பு நிபுணருமான கெவின் டிவொக்ஸ், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் நேற்று(22.06.2023) இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
நாடாளுமன்ற ஜனநாயகம், செயலாற்றுகை, முறைமையாக்கல் அபிவிருத்தி, மக்கள் பங்கேற்பு, ஜனநாயக ஆளுகை, நாடாளுமன்ற அலுவல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பு, தொழிநுட்ப ஆலோசனை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கொள்கை நிபுணரும் ஆட்சி முறைமை தொடர்பான பிரிவின் தலைவருமான சந்திரிகா கருணாரத்ன உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
