தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் - சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கோரிக்கை

Tamils Jaffna Parliament of Sri Lanka Social Democratic Party Nothern Province
By Theepan Aug 18, 2023 01:11 PM GMT
Report

 தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை உரிய முறையில் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்குப் புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பான அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதா வேண்டாமா பதின் மூன்று வேண்டுமா வேண்டாமா என்ற பட்டிமன்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ் மக்கள் மீது துவேஷங்களை விதைத்தவர்கள் சிங்கள அரசியல் தலைமைகளே.  தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்வுத்திட்டத்தை 

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக மாகாணசபை முறைமை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த மாகாணசபைக்கான அதிகாரங்களை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் நிறைவேற்றியது.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் - சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கோரிக்கை | International Community National Ethnic Problem

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தபோதிலும்கூட, அது இனப்பிரச்சினைக்கான ஒரு முழுமையான தீர்வு அல்ல என்ற காரணத்தால் 2009ஆம் ஆண்டுவரை யுத்தம் நீடித்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்திற்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடையில் மாறிமாறி வந்த இலங்கை அரசாங்கங்கள் புதிய புதிய தீர்வுத்திட்டங்களை உருவாக்கியது.

மங்களமுனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒரு தீர்வுத்திட்டத்தை வெளியிட்டது. சந்திரிகா பண்டாராநாயக குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபொழுது, அவர் ஒரு தீர்வுத்திட்டத்தை வெளியிட்டார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபொழுது, பேராசிரியர் திஸ்ஸவிதாரண தலைமையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு தீர்வுத்திட்டத்தை வெளியிட்டது. 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்தத்தின் பின்னர், 13க்கு அப்பால் சென்று பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கும் இந்திய தலைவர்களுக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

இந்த அனைத்து முயற்சிகளும் பதின்மூன்றுக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கான தீர்வை வெளிக்கொண்டு வந்தது. அது மாத்திரமல்லாமல், யுத்தம் நடைபெற்றபொழுது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பேராசிரியர் ஜி.எல் பீரிசும் விடுதலைப்புலிகளின் சார்பில் பாலசிங்கம் அவர்களும் சமஷ்டி தொடர்பில் கலந்துரையாடுவதற்குச் சம்மதம் தெரிவித்து ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள்.

சிங்கள அரசியல் கட்சிகளின் கருத்து 

அதுவே ஓஸ்லோ பிரகடனம் என அழைக்கப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க, இப்பொழுது பதின்மூன்றை முழுமையாக நிறைவேற்றுவதா இல்லையா என்ற கருத்தாடல்கள் ஒருபுறமும் பதின்மூன்றிலிருந்து எவற்றையெல்லாம் நீக்கிவிடலாம் என்ற கருத்தாடல் இன்னொருபுறமும் இருக்கின்றது.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் - சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கோரிக்கை | International Community National Ethnic Problem

பதின்மூன்று என்பதே வேண்டாம் தமிழ் மக்கள் வாயைப் பொத்திக்கொண்டிருந்தால் போதுமானது என்ற சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகள் மற்றொரு புறமும் இருந்துகொண்டு பதின்மூன்றாவது திருத்தம் என்பது பந்தாடப்படுகிறது.

இதனடிப்படையில் சிங்கள மக்கள் தாம் மாத்திரம்தான் இந்த நாட்டிற்குச் சொந்தமானவர்கள் என ஒரு பிழையான கற்பிதத்தைக் கொண்டுள்ளார்கள். தமிழர்கள் முஸ்லிம்கள் எல்லோரும் வந்தேற்ற குடிகள் எனவும் இவர்கள் விரட்டப்படவேண்டும் என்ற சிந்தனையும் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்றது.

பௌத்த பிக்குகள் சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து இது சிங்கள பௌத்த நாடென்ற ஒரு பொய்யானதும் தவறானதுமான பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கின்றனர். இன்று அனைத்து சிங்கள அரசியல் கட்சிகளும் அதிலிருந்து மீளமுடியாத நிலைக்குச் சென்றுள்ளன.

யுத்தம் நடைபெற்றபொழுது தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருந்தவர்கள் யுத்தம் முடிந்த பிறகு எதனையுமே கொடுக்கக்கூடாது என்ற நிலைக்கு வருவதாக இருந்தால் இவர்களுடன் பேசுவதில் அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஒரு விடயத்தை சிங்கள அரசியல் கட்சிகளும் சிங்கள சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவுதூரம் நீங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று உங்களைக் கொண்டாடுகிறீர்களோ அதற்கும் மேலதிகமாக இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக இந்த மண்ணின் மைந்தர்களாக இருப்பவர்கள் நாங்கள்.

ஆறாம் நூற்றாண்டில் சிங்கள மொழி உருவாகும்வரையில் நீங்கள் கூறுகிற விஜயன் உட்பட இந்த நாட்டிலிலுள்ள அனைவரும் தமிழே பேசினார்கள். கடைசி கண்டிய மன்னான ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனும் தமிழில்தான் கையெழுத்திட்டார்.

அது இன்றும் உங்கள் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. ஆகவே உங்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் எங்களுக்கும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்.

 பொருளாதார மீட்சி ஏற்பட வேண்டும்

அவ்வாறு இருந்தால் நீங்களும் நாங்களும் சகோதரர்களாக வாழமுடியும். ஆனால் பிழையான போலியான சித்தாந்தத்தின் காரணமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர்களுக்குமேல் கொலைவெறித் தாக்குதல்களை நடாத்துவதும் தமிழர்கள் கொல்லப்படுவதும் இடம்பெயர்வது என்பதும் சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்தேறியுள்ளது.

இவ்வாறான இனவாத செயலே தமிழர்களை தனிநாடு கேட்கத் தள்ளியது. சிங்கள அரசியல் சமூகத்தின் மத்தியில் இருக்கக்கூடிய முரண்பாடான இந்த நிலைமைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் - சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கோரிக்கை | International Community National Ethnic Problem

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை மேற்கண்ட எமது கருத்துகள் புலப்படுத்தியிருக்கும். ஏறத்தாழ எழுபது ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் தமது உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுக்கும் இந்த போராட்டத்தை இந்தியாவும்சரி சர்வதேசமும் சரி சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இன்று யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், பழைய செயற்பாடுகளை இவர்கள் மீண்டும் ஆரம்பிக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் ஏன் சீரழிந்துபோனது என்பதுபற்றிகூட இவர்கள் சிந்திக்க விரும்பவில்லை. 35வருட கால யுத்தத்தால் இந்த நாடு எவ்வளவுதூரம் அழிவுகளைச் சந்தித்தது என்பதை விளங்கிக்கொள்ளவும் மறுக்கின்றார்கள்.

வடக்குக்குப்போய் தமிழன் தலையை கொண்டுவருவோம் என்றும் தமிழனுக்கு எதுவுமே கொடுக்கக்கூடாது என்றும் பொலிஸ் அதிகாரங்கள் காணி அதிகாரங்கள் கொடுத்தால் நாடே பிளவுபட்டுப்போகும் என்றும் பிழையானதும் தவறானதுமான இனவாத கருத்துகளை மீண்டும் மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் திணிக்கின்றார்கள்.

குறைந்தபட்சம் இலங்கைக்கு ஒரு பொருளாதார மீட்சி ஏற்பட வேண்டுமாக இருந்தால், அந்த பொருளாதார மீட்சிக்காக இந்தியாவும் உலக நாடுகளும் இலங்கைக்கு உதவி செய்கின்ற இந்த வேளையில், இந்த நாட்டில் நிரந்தரமான ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் அனைத்தும் வழங்கப் படவேண்டும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெளிவான மொழியில் எடுத்துரைக்க வேண்டும்.

இல்லையேல் நீங்கள் கொடுக்கின்ற உதவிகளும் விழலுக்கிறைத்த நீராகிவிடும் என குறிப்பிட்டுள்ளார். 


   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW     


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US