நிகழ்நிலை விசா வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு
நிகழ்நிலை மூலம் விசா வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளமையால் நிகழ்நிலை விசா வழங்கும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
"நிகழ்நிலை மூலம் விசா வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
எதிர்காலத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
மேலும், ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் நிகழ்நிலை விசா வழங்கும் செயற்பாடுகளில் நிச்சயமற்ற தன்மை காணப்பட்டதுடன் நாட்டின் நற்பெயருக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இ - விசா சேவை
நிகழ்நிலை விசா நடைமுறையின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 1400 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தின் ஊடாக, 30 நாட்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் வருகை விசா மற்றும் 6 மாத கால சுற்றுலா விசா என்பன மாத்திரமே இனி வழங்கப்படும்.
கடந்த சில மாதங்களாக நடைமுறையில் இருந்த 2 - 5 வருடங்களுக்கான 17 வகையான குடியுரிமை விசா வழங்கும் நடைமுறையை உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நிறுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இ - விசா சேவை வழங்கும் பணியை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த 02ஆம் திகதி பிறப்பித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கும் மற்றொரு இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
