நாட்டை மீட்ட தலைவரை சிறையில் தள்ளுவதா..! ரணிலின் கைதுக்கு எதிராக அலி சப்ரி போர்க்கொடி
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டைச் சரிவில் இருந்து ரணில் விக்ரமசிங்கவே மீட்டார், அப்படியான ஒரு தலைவரை அரசியல் ரீதியில் பழிவாங்கும் வகையில் சிறையில் அடைப்பதா என முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு வெளியிட்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வருத்தமளிக்கும் விடயம்
அத்துடன் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் கணித்ததாகக் கூறப்படுவதற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைக் கைது செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி சமூக ஊடகச் செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறிக்கு எவ்வாறு முன்கூட்டியே தெரியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




