முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
"வயது காரணமாக அவரது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவு
மேலும், "முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆபத்தான நிலையில் இல்லை” என்றும் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலை மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை கிடைக்காததன் அவசியத்தை சுட்டிக்காட்டிய மருத்துவ மதிப்பீடுகளைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க நேற்று தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க, குற்றபுலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர் முதலில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri