ரணில் சிஐடிக்கு செல்லும் முன்னர் இடம்பெற்ற இரகசிய சந்திப்பு! கலந்துக்கொண்ட முக்கியஸ்தர்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப்புலனாய்வு துறையின் (CID) அழைப்பாணை பெறுவதற்கு முந்தைய தினம், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மூத்த தலைவர் சஷி தரூரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள ஓர் உணவகத்தில் சந்தித்துள்ளனர்.
முக்கிய சந்திப்பு
இந்தியாவின் முன்னாள் அமைச்சரான சஷி தரூர், INC-இன் முக்கியஸ்தராகக் கருதப்படுகிறார்.
எதிர்வரும் இந்திய பொதுத் தேர்தலில் ராகுல் காந்தியை மாற்றி, தரூரை அடுத்த அமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
Was honoured to be joined at dinner by former President of SriLanka Ranil Wickramasinghe and former Foreign Minister @alisabrypc as well as representatives of the younger generation, for a delightfully wide-ranging conversation on everything from India and BRICS to Sri Lanka’s… pic.twitter.com/zCMG5Gjcof
— Shashi Tharoor (@ShashiTharoor) August 17, 2025
இந்தியப் பயணம்
இதேவேளை, அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் குழுவொன்று ஓகஸ்ட் 28 ஆம் திகதி விக்ரமசிங்கவை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அந்த சந்திப்பில் யார் கலந்து கொள்வார்கள், எந்த நோக்கத்திற்காக நடைபெறுகிறது என்ற தகவல் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
மேலும், ரணில் விக்ரமசிங்க நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளப் பயணம், ஓர் ஹோட்டலின் பிரம்மாண்ட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பயணத்தின் விவரங்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.






