குறுகிய காலத்திற்கேனும் இடைக்கால அரசாங்க ஆட்சிக்கு பின் தேர்தல்! நிமால் புஞ்சிஹேவா வலியுறுத்தல்
நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தினால் சுமார் ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமைகளினால் தற்போது தேர்தல் ஒன்றுக்கு செல்வது பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து குறுகிய காலத்திற்கேனும் இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவி ஆட்சி செய்து பின்னர் தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியும்.
தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டுமாயின் நான்கு மாத கால அவகாசம் தேவைப்படும்.
அதற்கு முன்னர் எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்வெட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
தேர்தலுக்கு செலவிடும் பணத்தை இந்தப் பிரச்சினைகளை தீர்க்க பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri