வவுனியா மாவட்டத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை ஆரம்பம்
வவுனியாவிலிருந்து வெளி மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று (25.10) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை மாணவர்கள், அத்தியாவசிய தேவை, தொழில் புரிவோரின் வசதி கருதி (அவர்களுக்கு மாத்திரம்) குறித்த பேருந்து சேவை இன்று முதல் நாடளாவிய ரீதியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் காலை தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச்
சொந்தமான பேருந்துகள் இச்சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், வவுனியா மத்திய பேருந்து
நிலையத்திலிருந்து கொழும்பு, கண்டி, அக்கரைப்பற்று, திருகோணமலை, அனுராதபுரம்
ஆகிய மாவட்டங்களுக்குப் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தன.






