இலங்கையில் பொது அமைப்புக்கள் மீது தீவிர கண்காணிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இலங்கையில் பொது அமைப்புக்கள் மீது தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது.
இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கு சாத்தியமான வழிகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் மதிப்பீடு செய்வதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வின் போது, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
2015 க்குப் பின்னர் விரிவான மனிதவள மேம்பாட்டு செயல்முறைக்கு இலங்கை அரசாங்கம் இனி ஆதரவளிக்கவில்லை. இது வருந்தத்தக்க செயலாகும் இதன்காரணமாக கடந்த சில ஆண்டுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டமை குறித்து கவலையடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
காணாமல்போனவர்களின் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் போன்றவை இதற்கு உதாரணங்களாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியுடன் இருக்கும் என்று தாம் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.