நெருங்கும் பண்டிகை காலம்! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு போக்குவரத்து சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த பொலிஸ் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி டபிள்யூ. பி. ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தல் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சோதனைகளை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, பொலிஸ் நிலையங்களுக்குப் போதுமான மதுபானப் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் விபத்துக்களை குறைப்பதற்காகவே போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.