வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணி்ப்புரை
கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்து குடிபுகு சான்றிதழ் (COC) / அமைவு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் வணிக நோக்கில் இயங்கும் நிறுவனங்களில் வர்த்தக நடவடிக்கைகளை உள்ளூராட்சி மன்றங்களைத் தடை செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணித்துள்ளார்.
குடிபுகு சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமையால் குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமையாலும் உள்ளூராட்சி மன்றங்களால் வரி அறவிட முடியாத நிலைமை காணப்படுகின்றமையாலும் அதனால் ஏற்படும் வருமான இழப்பையும் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குப்பைகள் போடுவதைக் கண்காணிக்கும் வகையில்
இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், பருவமழை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாக திட்டங்களை நிறைவுசெய்யுமாறு கோரினார்.
அத்துடன் இம்முறை குறைவான காலப் பகுதியினுள் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்படக் காரணமாக இடங்களை அடையாளப்படுத்தி இம்முறை அந்தப் பாதிப்பை குறைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்படும் ஆவணங்கள் தொடர்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அந்த விண்ணப்பங்களை கிடப்பில்போடாமல் சம்பந்தப்பட்ட பொதுமகனுக்கு உடனடியாகவே அழைப்பை மேற்கொண்டு அவற்றைப்பெற்று விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து முடிக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
கழிவகற்றல் தொடர்பான விவகாரம் மிகப் பெரும் சவாலாக உருவாகிவரும் நிலையில் கொழும்பு மாநகர சபையால் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைப் பார்வையிட்டு அத்தகையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் போடுவதைக் கண்காணிக்கும் வகையில் சிசிரிவி கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.
நல்லூர் பிரதேச சபை அவ்வாறு சிசிரிவி கமராக்களைப் பொருத்தி அதன் ஊடாக தண்டப் பணத்தை அறவிட்டு வருவதாக சபையின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் இரகசியத்தை சொன்ன அமைச்சருக்கு சிக்கல்! வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முக்கிய சாட்சியாளர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
