சீரற்ற காலநிலை: வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சீரற்ற காலநிலை காரணமாக வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
பயணிக்கும் வேகம் தொடர்பில் அறிவுறுத்தல்
அதன்படி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் விடுத்துள்ள அறிவிப்பில், சீரற்ற காலநிலை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சாரதிகளுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகரிக்காமலும், 60 கிலோமீற்றர் வேகத்திற்கு குறையாத வகையிலும் பயணிக்குமாறு சாரதிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மின் விளக்கினை ஒளிரச்செய்த படி பயணிக்க வேண்டும்
எனினும் 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது உத்தரவாக பிறப்பிக்கப்படவில்லை.
அவதானத்துடன் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றருக்கும் அதிகரிக்காத வேகத்தில் பயணிக்க முடியும்.

முகில் கூட்டங்கள் காணப்படுவதனால் சாரதிகள் மின் விளக்கினை ஒளிரச்செய்த படி பயணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் வேறு தகவல்கள் அவசியமாயின் 1969 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam