கொழும்பில் வசிப்பவர்களுக்கு மாநகர மேயர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
கொழும்பில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்துடன் தடுப்பூசி போடப்படும் வரை அல்லது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் வேறு விதமாக பரிந்துரைக்கப்படும் வரை கொழும்பு முழுவதும் சீரற்ற கோவிட்-19 சோதனைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது தினமும் 1,000இற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் மற்றும் துரித ஆண்டிஜன் சோதனைகள் கொழும்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குறைந்தது 50 முதல் 60 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.
அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய நோயாளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலிருந்து குறைந்து விட்டாலும், கோவிட்-19 இன் அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதால் கொழும்பில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வைரஸால் பாதிக்கப்படுவதன் கனதியை மக்கள் இன்னும் உணரவில்லை. எனவே மக்கள் எச்சரிக்கையாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
