உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 17 சம்பவங்கள் குறித்து விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 17 சம்பவங்கள் குறித்து குற்றவியல் புலனாய்வுத்துறை மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு தற்போது விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணைகள் தொடர்பாக 32 பேர் மீது கேகாலை, கண்டி, குருநாகல் , புத்தளம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்களில் சட்டமா அதிபர் ஏற்கனவே ஒன்பது வழக்குகளை பதிவு செய்துள்ளார்.
மேலும்,சட்ட மா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் சட்ட அதிகாரிகள் எஞ்சியுள்ள எட்டு சம்பவங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்வது தொடர்பில் விவாதித்து வருகின்றனர்.
அதன்படி, இந்த எட்டு சம்பவங்கள் குறித்து விசாரணை முடிந்தவுடன் விரைவில்
வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 16 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri