35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை : மட்டு.ஊடக அமையம் கோரிக்கை

Batticaloa Journalists In Sri Lanka
By Kumar May 31, 2024 01:51 AM GMT
Report

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என மட்டு.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உண்டு எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அனுமதிக்கப்போவதில்லை:ஹரினி அமரசூரிய

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அனுமதிக்கப்போவதில்லை:ஹரினி அமரசூரிய

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த இருபது வருடங்களாக படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

26 ஊடகவியலாளர்கள் படுகொலை

இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை : மட்டு.ஊடக அமையம் கோரிக்கை | Inquiry Into Killings 35 Tamil Journalists

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

1985ம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ஆம் ஆண்டுவரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த படுகொலை ஆட்சியை ஊடகத்துறையின் பெரும் பங்குடன் முடிவுக்கு கொண்டுவந்த இலங்கை அரசாங்கம் இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்த போதும் அதன் குற்றவாளிகள் கூட கைது செய்யப்படவில்லை.அத்தோடு இந்த நாட்டில் பெருந்தொகையாக படுகொலை கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை இன்றுவரை ஆரம்பிக்கவில்லை.

இந்தியாவில் கைதான 4 ஐ.எஸ் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர பேச்சுவார்த்தை

இந்தியாவில் கைதான 4 ஐ.எஸ் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர பேச்சுவார்த்தை

இந்நிலையில் மட்டக்களப்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளரும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் 20 வது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடம் மேற்படி கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

1. இலங்கையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்ட வேண்டும்.

2. இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட காணாமல்போன ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடவேண்டும்.

3. இலங்கையில் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்த சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

4. மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்கவேண்டும். உள்ளிட்ட எமது கோரிக்கைகளை சர்வதேச தேச அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

வங்கி கணக்குகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வங்கி கணக்குகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

20வது ஆண்டு நினைவேந்தல்

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமன் என்ற அடிப்படையில் 20 வருடங்களுக்கு பின்னரும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உண்டு என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்துகின்றது.

நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், பொது அமைப்புகளை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் ஆயுத தாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இயங்குநிலை தென்மேல் பருவப்பெயர்ச்சியினால் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம்

இயங்குநிலை தென்மேல் பருவப்பெயர்ச்சியினால் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம்

தேயிலைத் தோட்டங்கள் குறித்த அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

தேயிலைத் தோட்டங்கள் குறித்த அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Ajax, Canada

16 Mar, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, உரும்பிராய், கண்டி, London, United Kingdom, Toronto, Canada

04 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

05 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், London, United Kingdom

07 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, யாழ்ப்பாணம், கனடா, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், சிட்னி, Australia

03 Apr, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, East Ham, United Kingdom

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US