திருகோணமலையில் நூற்றுக்கணக்கான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில்! அரச நிதி துஷ்பிரயோகம் குறித்து விசாரணை - பிரதி அமைச்சர்

Sri Lanka Government Of Sri Lanka Arun Hemachandra
By Kiyas Shafe Oct 11, 2026 09:51 AM GMT
Report

2015 - 2019 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படாததால், திருகோணமலை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூதூர் பிரதேசத்தில் குறைந்த வருமானம் கொண்ட வீடற்ற மூன்று குடும்பங்களுக்கு அரச நிதியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை நேற்று (10.10.2026) உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நூற்றுக்கணக்கான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில்! அரச நிதி துஷ்பிரயோகம் குறித்து விசாரணை - பிரதி அமைச்சர் | Inquiry Begins Deputy Minister

வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பம்

மேலும் கூறுகையில், 2015 முதல் 2019 வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காகப் பெருமளவிலான அரச நிதி செலவிடப்பட்ட போதிலும், பல இடங்களில் வீடமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை.

சில இடங்களில் வீடுகளுக்கான அத்திவாரங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. வேறு சில இடங்களில் சுவர்கள் ஓரளவுக்கு நிர்மாணிக்கப்பட்ட பின்னர் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பல வீடமைப்புத் திட்டங்கள் பயன்பாடற்ற நிலையில் காணப்படுகின்றன.

திருகோணமலையில் நூற்றுக்கணக்கான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில்! அரச நிதி துஷ்பிரயோகம் குறித்து விசாரணை - பிரதி அமைச்சர் | Inquiry Begins Deputy Minister

சில பயனாளிகள் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு வீடுகளை ஓரளவுக்குப் பூர்த்தி செய்து குடியிருப்பதற்குத் தயார்படுத்தியுள்ளனர். எனினும், பல பகுதிகளில் வீடுகள் முழுமையடையாததால், பயனாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் முழுமையடையாமல் கைவிடப்பட்டுள்ளன.

வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிப்பதாகக் கூறி பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதுடன், இதற்காக ஒதுக்கப்பட்ட அரச நிதி உரிய முறையில் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை

2019ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் சில திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படாமல் போனமைக்குக் காரணமாக அமைந்தது.

திருகோணமலையில் நூற்றுக்கணக்கான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில்! அரச நிதி துஷ்பிரயோகம் குறித்து விசாரணை - பிரதி அமைச்சர் | Inquiry Begins Deputy Minister

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றை மீள ஆரம்பித்து நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், திருகோணமலை மாவட்டத்திலும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை மீள ஆரம்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், வீடமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலையில் நூற்றுக்கணக்கான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில்! அரச நிதி துஷ்பிரயோகம் குறித்து விசாரணை - பிரதி அமைச்சர் | Inquiry Begins Deputy Minister

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US