கலகம் விளைவித்த கைதிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மஹர சிறைச்சாலையில் கலகம் விளைவித்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய கைதிகளைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதியன்று கோவிட் தொற்றுக்குள்ளான கைதிகளுக்குப் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலை கைதிகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் வன்முறையாக மாறி, சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சிறைக்கட்டிடங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களம்
மேலும், அதிகாரிகளைத் தாக்கி சிறைச்சாலையைச் சேதப்படுத்திய 63 கைதிகளை உடனடியாக கைது செய்யுமாறு வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தின் போது, சுமார் 2 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கைகளைக் கவனத்தில் கொண்டு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து கைதிகளும் கைது
சிறைச்சாலை கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டதில் சுமார் ஒரு கோடியே எழுபத்து நான்கு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிறைச்சாலையில் சேகரிக்கப்பட்ட சுமார் 19 இலட்சம் ரூபா உணவுப் பொருட்களைக் கைதிகள் எரித்துத் தாக்கியதன் மூலம் சுமார் இரண்டு கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதிமன்ற நீதிபதி, குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைத்து கைதிகளையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
